மகளின் வளைகாப்பிற்கு சீர் வரிசை கொடுத்த ரோபோசங்கர்

ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவுக்கு குடும்பத்தினருடன் சென்று ரோபோ சங்கர் சீர் செய்துள்ளார்.

இந்திரஜா சங்கர்

தமிழ் சினிமாவில் பிரபலமாக உள்ள வாரிசு நடிகைகளில் ஒருவர் இந்திரஜா சங்கர்.

இவர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்திரஜாவின் உணர்ச்சிகரமான நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்.

இதனை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்திலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதற்கு பின்னர் சினிமாவில் வலம் வருவார் என எதிர்பார்த்த வேளையில், அவருடைய மாமா- கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.

ஐந்தாவது மாத வளைகாப்பு

இந்த நிலையில், தற்போது கர்ப்பமாக இருக்கும் இந்திரஜா – கார்த்தி தம்பதியினருக்கு ஐந்தாவது வளைகாப்பு நிகழ்வு நடந்து முடிந்துள்ளது.

இதன்போது இந்திரஜா குடும்பத்தினருடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், புளிப்பு சுவை பிடித்து, குழந்தையின் இதயத்துடிப்பை அறிந்து ரசித்த நாள்… 5 ஆம் மாதம் பூச்சூடல் விழா என பதிவிட்டுள்ளார். இந்த வளைகாப்பு நிகழ்வில் நெருங்கி உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.