உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என நினைப்பவர்கள் தினமும் ஒரு சில பழக்கங்களை பின்பற்றுவது அவசியம்.
உடலில் இருக்கும் நச்சுக்கள் சரியான நேரத்தில் வெளியேறினால் மாத்திரமே உடல் ஆரோக்கியமாக இருக்கும். அவ்வப்போது இந்த செயன்முறை நடைபெற வேண்டும்.
வழக்கமாக நமது உடலில் இருக்கும் நச்சுக்கள் நாம் உண்ணும் உணவுகள், சுவாசிக்கும் காற்று, குடிக்கும் நீர் ஆகியவை மூலம் நமது உடலுக்குள் இலகுவாக நுழையும்.
இவ்வாறு உடலில் சேரும் நச்சுக்களை அவ்வப்போது வெளியேறாமல் இருப்பின் அது காலப்போக்கில் நோய் நிலைமைக்கு ஆளாக்கும்.
அந்த வகையில், உடலில் இருக்கும் நச்சுக்களை சீரான இடைவெளியில் வெளியேற்ற வேண்டும் என்றால் நாம் இயற்கையாக என்ன மாதிரியான வழிமுறைகளை கையாளலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. சியா விதைகள்
உருவத்தில் மிகச்சிறிய விதைகளான சியா விதைகள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் கொண்டது. அத்துடன் செரிமானத்திற்கு தேவையான நார்ச்சத்துக்களும் சியா விதைகளில் உள்ளது. தொடர்ந்து நாம் சியா விதைகளை உட்க் கொள்ளும் பொழுது செரிமான மண்டலத்தில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறும். சிலருக்கு மலச்சிக்கல் பிரச்சினை இருக்கும். அப்படியானவர்களின் குடல் ஆரோக்கியத்தை பாதுகாத்து மலச்சிக்கலை குறைக்கின்றது.
2. பார்ஸ்லி
பார்ஸ்லி என்பது ஒரு சக்தி வாய்ந்த நச்சு நீக்கும் மூலிகையாக பார்க்கப்படுகின்றது. இதிலிருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்? குளோரோபில் உடலில் உள்ள மெட்டல் மற்றும் பிற நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் கொண்டது. அதிலும் குறிப்பாக டையூரிக் பண்பு கொண்ட பார்ஸ்லி சிறுநீர் உற்பத்தியை தூண்டி, நச்சுக்கள் மற்றும் அதிகப்படியான நீரை வெளியேற்ற உதவியாக உள்ளது. இதனை திரவ உணவுகள் அல்லது சாலட்டுக்களில் சேர்த்து சாப்பிடலாம்.
3. மஞ்சள்
தினசரி சமையலில் மஞ்சள் தூள் சேர்ப்பதால் மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்னும் பொருள் உடலுக்குள் சென்று ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை உருவாக்குகின்றது. தினசரி மஞ்சளை உணவில் சேர்த்து சமைக்கும் பொழுது, கல்லீரலை நச்சு, செரிமானம், மாசுக்கள் அகற்றுதல் உள்ளிட்ட பல வேலைகள் சரியாக நடக்கின்றன. மஞ்சள் தூளை சமையலில் சேர்ப்பதைத் தவிர, வெதுவெதுப்பான நீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இது போன்ற பல பலன்களை பார்க்கலாம்.