தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா?

சாப்பிடும் பொழுது இனிப்பு மற்றும் புளிப்பு சுவை சேர்த்தால் போல் இருக்கும் ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.

ஆரஞ்சு பழத்தில் இந்த ஊட்டச்சத்து மட்டுமல்லாமல் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த பழத்தை தினமும் சாப்பிடும் ஒருவருக்கு சீக்கிரம் எடை குறையும் என்பார்கள்.

ஏனெனின் ஆரஞ்சு பழங்களில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதோடு கலோரிகள் குறைவாக உள்ளது.எனவே நம் உடலில் இருக்கும் கூடுதல் எடையை குறைக்க கணிசமாகக் குறைக்க ஆரஞ்சு பழம் உதவியாக இருக்கின்றது.

தினசரி தன்னுடைய உணவுடன் ஒரு ஆரஞ்சு பழத்தை சேர்த்து சாப்பிடும் பொழுது வளர்சிதை மாற்றம் அதிகரிக்கின்றது. அத்துடன் ஹைட்ரேஷன் அளவை மேம்படுகின்றது.

இது போன்று ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் வேறு என்னென்ன பலன்கள் கிடைக்கின்றன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்

1. ஸ்நாக்ஸ் அதிகமாக சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள் ஸ்நாக்ஸாக ஆரஞ்சு பழங்களை எடுத்து கொள்ளலாம். இதிலிருக்கும் நார்ச்சத்துக்கள் உங்களின் செரிமானத்திற்கு உதவியாக இருக்கும். அத்துடன் செரிமானத்தினால் வரும் மற்ற பிரச்சினைகளும் கட்டுக்குள் வரும்.

2. ஓரு மீடியம் சைஸ் ஆரஞ்சு பழத்தில் 60 முதல் 80 கலோரிகள் வரை உள்ளன. இது எடையை குறைத்து சிலிம்மாக மாற நினைப்பவர்களுக்கு சிறந்த மருந்தாக உள்ளது.

3. ஆரோக்கியமான வளர்சிதை மாற்றம் தரும் ஆரஞ்சு பழங்களை தினமும் சாப்பிடும் ஒருவரின் உடல் ஹைட்ரேட்டாக இருக்கும்.

4. மனிதர்களுக்கு உணவு எவ்வளவு அவசியமோ அதே அளவிற்கு அவர்களுக்கு நீர்ச்சத்து அவசியம். இதனை ஆரஞ்சு பழங்கள் சரிச் செய்கின்றது.

5. ஆரஞ்சு பழங்கள் லோ கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்டிருக்கும். இதனால் இந்த பழங்கள் எவ்வளவு சாப்பிட்டாலும் ரத்த சர்க்கரை அளவு மெதுவாகவும் படிப்படியாகவும் மட்டுமே அதிகரிக்கும்.

6. வைட்டமின் சி கொழுப்பு வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் கொழுப்பை ஆற்றலாக மாற்றவும் உதவுகிறது. இந்த சத்து ஆரஞ்சு பழங்களில் நிறையவே உள்ளது. ஆகையால் உடலுக்கு பாதிப்பு பெரிதாக இல்லை.

எடை குறைப்பது எப்படி?
ஆரஞ்சு பழங்களை பழமாக சாப்பிடுவதை தவிர்த்து பானமாகவும், சாலட்டுடன் சேர்த்தும் சாப்பிடுவது சிறந்தது.
காலையில் அவசரமாக வேலைக்கு கிளம்பும் முன்னர் ஸ்மூத்திஸ் போன்று செய்து ஆரஞ்சு பழத்தை எடுத்து கொள்ளலாம்.