பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நடிகர் ரஞ்சித்தின் முன்னாள் மனைவி நடிகை ப்ரியா ராமன் பல விடயங்களைக் கூறியுள்ளார்.
நடிகர் ரஞ்சித்
தமிழ் சினிமாவில் 90 காலக்கட்டங்களில் பிரபல நடிகராக வலம்வந்தவர் தான் நடிகர் ரஞ்சித். இவர் இயக்கிய கவுண்டம்பாளையம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
படத்தில் தலைப்பு சாதிக்குறியீடு, முகம் சுழிக்க வைக்கும் காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள் என்று பல சர்ச்சையை அடுக்கினர்.
இப்படத்தில் தனக்கு ஏற்பட்ட கெட்ட பெயரை மாற்றிக்கொள்ள தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் சென்றுள்ளார்.
முன்னாள் மனைவியின் கருத்து
நடிகர் ரஞ்சித் 1999ம் ஆண்டு நடிகை ப்ரியா ராமன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் பின்பு 2015ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். பின்பு பிரியா ராமன் செம்பருத்தி சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிக்க தொடங்கினார்.
இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், இருவரும் ப்ரியா ராமனுடன் வளர்ந்து வருகின்றனர்.
பின்பு ரஞ்சித் மற்றும் பிரியா ராமனின் புகைப்படம் ஒன்றாக வெளியான நிலையில், ரசிகர்கள் இருவரும் ஒன்று சேர்ந்துவிட்டதாக நினைத்தனர்.
ஆனால் சீரியலுக்காக இருவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்திருந்தது தெரியவந்துள்ளது. தற்போது ரஞ்சித் பிக்பாஸில் விளையாடுவதைக் குறித்து பிரியா பேசியுள்ளார்.
“ரஞ்சித் ஆர்வ கோளாறு கிடையாது. அவருக்கு எந்த நேரத்தில் அடிக்க வேண்டும் என்பது தெரியும். அந்த சமயத்தில் அவர் கண்டிப்பாக ஜொலிப்பார்” என்று கூறியிருக்கிறார்.
மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜாக்குலின்-ரஞ்சித் தந்தை-மகள் பர்ஃபாமன்ஸ் குறித்து பேசிய அவர் அதை ரஞ்சித் மிகவும் அழகாக செய்திருந்ததாக பேசியிருக்கிறார்.