ஜெயம் ரவியின் 34வது படத்தில் இணையும் இயக்குனர் ரத்னகுமார்!

ஜெயம் ரவி நடித்துள்ள பிரதர் படம் தீபாவளிக்கு வெளியாகும் நிலையில் ஜீனி, காதலிக்க நேரமில்லை போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து டாடா படத்தை இயக்கிய கணேஷ் பாபு இயக்கும் தனது 34வது படத்தில் விரைவில் நடிக்க போகிறார் ஜெயம் ரவி. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்தில் நடிக்க இருக்கும் நடிகர், நடிகைகள் குறித்த தகவல் விரைவில் வெளியாக உள்ளது.

மேலும், ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் திரைக்கதை ஆசிரியராக இயக்குனர் ரத்னகுமார் இணைந்திருக்கிறார். இந்த ரத்னகுமார் மேயாதமான், ஆடை போன்ற படங்களை இயக்கியவர். லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர், விக்ரம், லியோ மற்றும் கூலி போன்ற படங்களில் டயலாக் மற்றும் ஸ்கிரிப்ட் ரைட்டராகவும் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது