சமீபத்தில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ள திரைப்படம் பிளாக்.
வித்தியாசமான கதைக்களம், மிரட்டலான திரைக்கதையில் உருவான இப்படத்தில் ஜீவா மற்றும் பிரியா பவானி ஷங்கர் இணைந்து நடித்திருந்தனர். இப்
இயக்குனர் சுப்பிரமணி என்பவர் இயக்க, ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்து இருந்தது.
வேட்டையன் படம் வெளிவந்த அதே வாரத்தில் பிளாக் வெளிவந்தாலும், நல்ல வசூல் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த வாரம் தான் இப்படத்தின் வெற்றியை படக்குழு கொண்டாடினார்கள்.
இந்த நிலையில், 12 நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் பிளாக் திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 12 நாட்களில் உலகளவில் ரூ. 9.6 கோடி வரை வசூல் செய்துள்ளது.