பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிரின் காதலி இந்த நடிகை தானாம்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிரின் காதலி பற்றிய விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

பிரபல தொலைக்காட்சியில் குடும்பங்கள் கொண்டாடும் சீரியல்களில் ஒன்றாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

கடந்த 5 வருடங்களாக முதல் சீசன் வெற்றிகரமாக முடித்த இந்த சீரியல் தற்போது தன்னுடைய இரண்டாவது பாகத்தை துவங்கியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாம் பாகத்தில் முதல் பாகத்தில் நடித்த சில நடிகர்கள் நடிக்கிறார்கள். 2ஆம் பாகத்தில் அப்பா-மகன்களின் பாசத்தை உணர்த்தும் வகையில் கதை நகர்ந்து கொண்டிருக்கின்றது.

கதிர் காதலிக்கும் நடிகை யார் தெரியுமா?

இந்த நிலையில், தங்கமயில் செய்த பித்தலாட்டங்கள் அனைத்தும் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வீட்டிலுள்ளவர்களுக்கு தெரியவந்து அது ஒரு பெரிய பிரச்சினையாக வீட்டில் வெடித்து கொண்டிருந்தது.

இப்படி இருக்கும் பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஆகாஷின் காதலி பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது.
கதிராக மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்து வைத்திருக்கும் நடிகர் ஆகாஷ், “வீட்டுக்கு வீடு வாசப்படி” சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆர்த்தியை காதலித்து வருகிறாராம்.

இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஆனால் எந்தளவு உண்மை என்ற விவரங்கள் இதுவரையில் வெளியாகவில்லை.