கங்குவா பட விமர்சனம்!

இந்த ஆண்டு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் கங்குவா. எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பின் இரண்டு ஆண்டுகள் கழித்து சூர்யாவின் நடிப்பில் திரைக்கு வரும் படம் இதுவே ஆகும்.

இதனால் கங்குவா படத்தின் மீது அளவுகடந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர். பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தை சிறுத்தை சிவா இயக்க ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பாலிவுட் நட்சத்திரங்கள் திஷா பாட்னி, பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். அடுத்த மாதம் 14ஆம் தேதி கங்குவா படம் வெளிவரவிருக்கும் நிலையில், பாலிவுட்டில் தற்போதே படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளை படக்குழு துவங்கிவிட்டன.

இந்த நிலையில், பாடலாசியர் மதன் கார்க்கி கங்குவா படத்தை முழுமையாக பார்த்துவிட்டு, தனது விமர்சனத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

முதல் விமர்சனம்

இந்த பதிவில் ” இன்று கங்குவா படத்தின் முழுப் பதிப்பை பார்த்தேன். டப்பிங் செய்யும் போது ஒவ்வொரு காட்சியையும் நூறு தடவைகளுக்கு மேல் பார்த்திருக்கிறேன், ஆனாலும் ஒவ்வொரு முறையும் பார்க்கும்போதும் படத்தின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

காட்சிகளின் பிரம்மாண்டம், கலையின் நுணுக்கமான விவரங்கள், கதையின் ஆழம் மற்றும் இசையின் கம்பீரம் அனைத்தும் ஒரு பவர்ஹவுஸ் நடிகர் சூர்யாவுடன் இணைந்து உருவாக்கிய மிகச்சிறந்த கலை படைப்புகளில் ஒன்றாகும். இயக்குனர் சிவா மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு மனமார்ந்த நன்றி ” என தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

மதன் கார்க்கி தெரிவித்துள்ள விமர்சனத்தின்படி படம் வெறித்தனமாக வந்துள்ளது என தெறிக்கிறது. கண்டிப்பாக நவம்பர் 14ஆம் தேதி சூர்யா ரசிகர்கள் சிறப்பான விருந்து காத்திருக்கிறது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.