இலங்கைக்கு (Sri lanka) சுற்றுலா வந்திருந்த 22 இஸ்ரேல் (Israel) பிரஜைகள் தங்களது நாட்டுக்கு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த இஸ்ரேலிய பிரஜைகள் குழு இன்று அதிகாலை 03.03 மணியளவில் Fly Dubai விமானமான FZ-570 இல் விமானத்தில் டுபாய் (Dubai) நோக்கிப் புறப்பட்டுள்ளாதாக கூறப்பட்டுள்ளது.
சுற்றுலா தளமான அறுகம் குடா பகுதியில் தாக்குதல் நடாத்தப்படலாம் எனவே என்று இலங்கையில் தங்கியிருப்பது ஆபத்தானது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகமும், இஸ்ரேலிய அரசாங்கமும் நேற்றையதினம் (23) அறிவித்திருந்தன.
இதனை தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
இந்நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இஸ்ரேலியர்கள் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டு தமது நாட்டுக்கு செல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இஸ்ரேலுக்கு திட்டமிடப்பட்ட விமானங்கள் இல்லாததால், இந்த இஸ்ரேலியர்கள் குழு டுபாய் சென்று அங்கிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் அல்லது ஜெருசலேம் ஆகிய விமான நிலையங்களுக்கு புறப்பட்டுச் செல்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த நாட்டில் இஸ்ரேலிய பிரஜைகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.