கனடாவின் நயகரா பிராந்தியத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன நபர் ஒருவரின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அண்மையில் நாயகரா பிராந்தியத்தில் மனித உடல் பாகங்கள் மீட்கப்பட்டிருந்தன.
இந்த மனித எச்சங்கள் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது இறந்த ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன நபர் ஒருவருடைய உடல் பாகங்களே இவை என அடையாளம் காணப்பட்டுள்ளன.
கயில் புரொக்கல்பேங்க் என்ற நபரின் உடல் பாகங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. கடந்த 2022 ஆம் ஆண்டு குறித்த நபர் காணாமல் போயிருந்தார்.
இந்த உடல் பாகங்கள் மீட்கப்பட்ட சம்பவம் காரணமாக பொது மக்களுக்கு எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தலும் கிடையாது என நயகரா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நபரின் மரணத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை.