900 கோடி சம்பளம் வாங்கும் பிரபாஸ்

ஒரு நடிகருக்கு எல்லா படங்களும் வெற்றியாவதில்லை, அப்படி ஒரு படம் ஹிட்டானால் அவர்களது வாழ்க்கையே மாறிவிடுகிறது.

அப்படி எஸ்.எஸ்.ராஜமௌலியின் பாகுபலி படம் மூலம் இந்திய சினிமா கொண்டாடும் நடிகராக மாறியவர் நடிகர் பிரபாஸ்.

இந்த படத்திற்கு பிறகு பிரபாஸ், ஆதிபுருஷ், சலார், கல்கி 2898 ஏடி போன்ற படங்கள் நடித்துவிட்டார். அடுத்து அவரது கைவசம் 6 படங்களுக்கு மேல் உள்ளதாம்.

பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸின் மார்க்கெட் பெரிய அளவில் உயர அவரது சம்பளமும் பல கோடிகளை தாண்டியுள்ளது.

தற்போது வந்த தகவல்படி, அடுத்தடுத்து பிரபாஸ் 6 படங்கள் கமிட்டாகி இருப்பதாகவும் அப்படங்களுக்காக மொத்தம் அவர் வாங்கப்போகும் சம்பளம் ரூ. 900 கோடி வரை என கூறப்படுகிறது.