தினமும் ஆரோக்கிய உணவுகளை சாப்பிட வேண்டும் என்று தான் பலரும் விரும்புவார்கள்.
இப்படி நினைப்பவர்கள் காலையில் சர்க்கரை வள்ளிக் கிழங்கு சாப்பிடலாம்.
இந்த உணவில் மனித உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதனால் சர்க்கரை வள்ளி கிழங்கை காலையுணவாக சாப்பிடுவது சிறந்தது என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
ஏனெனில் சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடும் ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகின்றது.
அந்த வகையில், சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் வேறு என்னென்ன மருத்துவ நன்மைகள் உள்ளன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
சர்க்கரை வள்ளி கிழங்கின் பலன்கள்
1. ஒருவருக்கு கண் ஆரோக்கியம் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது. இதில் ஏதாவது கோளாறுகள் ஏற்படும் பொழுது அது கண் பார்வையில் தாக்கம் செலுத்தும். கண்ணின் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்து ஏ சர்க்கரை வள்ளி கிழங்கில் உள்ளது. தினமும் காலையில் சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடும் ஒருவரின் கண் ஆரோக்கியம் மேம்படுத்தப்படுகின்றது.
2. குளிர்காலங்களில் சிலருக்கு தொற்றுக்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். இப்படியானவர்கள் காலையில் சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடலாம். இது அவர்களின் உடலில் இருக்கும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலை அதிகரிக்கும்.
3. கொலாஜன் உற்பத்தி மற்றும் தோல் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் சி சர்க்கரை வள்ளி கிழங்கில் அதிகமாக உள்ளது.
4. பீட்டா கரோட்டின் ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும் இது உடலுக்கு தேவையான வைட்டமின் ஏ சத்தை பெற்றுத்தருகின்றது. இது சர்க்கரை வள்ளிக்கிழங்கில் ஏராளமாக உள்ளது. அதிலும் மாலைக்கண் போன்ற ஆபத்தான நோய்கள் வராமல் எம்மை காத்துக் கொள்கிறது.
5. அடிக்கடி சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடுவதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதனால் சளி, இருமல் போன்ற பிரச்சினைகள் வருவது குறைவாக இருக்கும்.
6. சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நார்ச்சத்து உள்ளது. இது செரிமான ஆரோக்கியத்தை பராமரிக்கின்றது. ஃபைபர் உள்ளடக்கம் மலத்தின் தன்மையை லேசாக மாற்றும். ஏனெனின் சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடும் பொழுது குடலின் இயக்கம் எளிதாகின்றது. மலச்சிக்கல் பிரச்சினை நம்மில் பலருக்கு உள்ளது. இவர்கள் சர்க்கரை வள்ளி கிழங்கை உணவுடன் சேர்த்து கொள்வது நல்லது.