அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மீது ஸ்டேஷி வில்லியம்ஸ் என்ற அந்த மாடல் பிரபலம் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஸ்டேஷி வில்லியம்ஸ் என்ற அந்த மாடல் பிரபலம் ஆங்கில தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,
1993 ஆம் ஆண்டு டிரம்ப் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
அந்த பேட்டியில் அவர் கூறியதாவது,
கடந்த 1992 ஆம் ஆண்டில் கிறிஸ்துமஸ் சமயத்தில் நடந்த விருந்து ஒன்றில் வைத்து ட்ரம்ப்பை முதன்முதலில் சந்தித்தேன்.
அப்போது உடனிருந்த எனது நண்பர் எப்ஸ்டின் உடன் பேசிக் கொண்டே என்னிடம் டிரம்ப் பாலியல் ரீதியாக அத்துமீறினார்.
எனக்கு அப்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை. எதுவும் பேசமுடியாத நிலைக்கு ஆளானேன். இந்த சம்பவம் பற்றி எனது நண்பர்களிடம் சொல்லி இருக்கிறேன்.
குறித்த சம்பவம் நடந்து சில நாட்கள் கழித்து ட்ரம்ப்பிடமிருந்து எனக்கு ஒரு போஸ்ட் கார்டு மட்டும் வந்தது என்று ஸ்டேஷி அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.
இதற்கிடையே இது எதிர் போட்டியாளர் கமலா ஹாரிஸ் தரப்பின் சதிவேலை என்று டிரம்ப் தரப்பு தெரிவிக்கிறது.