வீட்டில் தனியாக இருக்கும் போது சமையலறையில் இருந்து எரிவாயு கசிவு வாசனை வந்தால் அங்கிருந்தே பெற்றோர் அல்லது பெரியவர்களிடம் கையடக்க தொலைபேசியில் அறிவிக்க வேண்டாம் என தீயணைப்புத் துறையின் முதன்மை அதிகாரி பி.டி.ஏ.கமல் வில்சன் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டால், சிலிண்டரில் இருந்து தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, வீட்டை விட்டு வெளியே சென்று இது தொடர்பில் தெரிவிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல சிறுவர்களை தங்கள் ஆடைகளை அயர்ன் செய்து முடித்ததும் மின்சார இணைப்பில் இருந்து வயரை அகற்ற மறந்து விடுகின்றார்கள். இதனால் வீடுகள் தீப்பிடித்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்த மறதி பெரும் ஆபத்தாக அமைந்து விடும். எனவே, சிறுவர்களுடன் பணிபுரியும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என பெற்றோர்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.