நடிகர் விஜய்
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை ஏற்கனவே தொடங்கி இருந்தாலும், அதன் கொள்கைகள் என்ன என்பதை பற்றி சொல்லாமல் இருந்தார்.
அதை சொல்வதற்காக விஜய் ஏற்பாடு செய்து இருந்த பிரம்மாண்ட மாநில மாநாடு நேற்று விக்கிரவாண்டியில் நடந்தது. அதில் பல லட்சம் பேர் கலந்துகொண்டு இருந்தனர்.
நேற்று நடந்து முடிந்த மாநாட்டில் விஜய் அவர் கட்சியின் கொள்கைகள் என்னென்ன என்பதை குறித்து பலவற்றை முன் வைத்தார்.
அதில், குறிப்பாக அவர் கட்சியில் சாதி, மதம் என்ற பிரிவு எதும் இல்லாமல் அனைவரும் சமம் என்றும் ஊழல் இல்லாத சமூகத்தை உருவாக்க செயல் படுவதற்காக தான் இந்த தவெக கட்சி தொடங்கி உள்ளதாக கூறி பலரின் பாராட்டை பெற்றார்.
இதனிடையே, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், விஜய் அரசியல் தொடக்கத்தை வரவேற்று நடிகர் பிரகாஷ் ராஜ் அவரது ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “உங்கள் புதிய பயணத்திற்கு.. ஆல் தி பெஸ்ட் செல்லம்” என்று பதிவிட்டுள்ளார்.
All the best Chellam @actorvijay on your new journey.. pic.twitter.com/XUBS0AmYkM
— Prakash Raj (@prakashraaj) October 27, 2024