அறுவை சிகிச்சைக்கு தயாரான டிடி

தொகுப்பாளினி டிடி அறுவை சிகிச்சைக்கு பின்னர் ட்ரெண்டிங் சேலையில் கியூட் போஸ் கொடுத்து ரசிகர்களை குஷியாக்கும் வகையில் தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

பிரபல தொகை்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் தான் திவ்யதர்ஷினி.இவரை டிடி என ரசிகர்கள் செல்லமாக அழைப்பார்கள்.

காஃபி வித் டிடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்தார். விசில் திரைப்படம் தொடங்கி பவர் பாண்டி, சர்வம் தாள மயம், காபி வித் காதல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களில் பின்னணி குரலும் கொடுத்துள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.ஆனால் இவர்களுடைய திருமண வாழ்கை விவாகரத்தில் முடிந்தது.

இவர் தற்போது உடல்நிலை காரணமாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதை நிறுத்திவிட்டார். முழங்கால் வலிக்காக அவர் முதலில் செய்த ஆபரேசன் தவறாகி விடவே அது மேலும் அதிக வலியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்காக நிகழ்ச்சி தொகுப்பில் இருந்து நீண்ட நாட்கள் விலகி இருக்க வேண்டிய நிலை உருவாகியது. அதன் பிறகு மேடைகளில் சில மணி நேரங்கள் மட்டுமே நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார் திவ்ய தர்ஷினி.

தற்போது டிடி அவரது கால் பிரச்சனையை சரிசெய்ய முழு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு இருக்கிறார்.காலில் உலோகத்தால் ஆன செயற்கையான முட்டி அவருக்கு பொருத்தப்பட்டு இருக்கிறது.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன் சர்ஜரி நடைபெற்றதாகவும், தற்போது தான் சரியாகி வருவதாகவும் அண்மையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது ட்ரெண்டிங் சேலையில் கியூட் போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் காணொளி இணையத்தில் லைக்குகளையும் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.