வாஸ்து சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில சிலைகளை வீட்டில் வைத்திருப்பது அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் எனவும் நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் எனவும் நம்பப்படுகின்றது.
இந்த வகையில் வீட்டில் சிலர் குபேரன் சிலையை வைத்திருப்பார்கள். அது வாஸ்து சாஸ்திரத்தின் பிரகாரம் எந்த வகையில் பலன்களை கொடுக்கும் அந்த இடத்தில் வைப்பது சரியானது என்பது தொடர்பில் ழுழுமையான விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
சிரிக்கும் புத்தர் என்று சொல்லக்கூடிய குபேரர் சிலை மகிழ்ச்சியின் சின்னமாக உலகெங்கிலும் பிரபல்யம் அடைந்துன்னது.
குண்டான கன்னங்களுடன் சிரிக்கும் குபரேர் சிலைகனை பார்ப்பதால் மன அழுத்தம் குறைவதாக உளவியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் குபேரன் சிலையை வீட்டில் வைப்பதால் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் அகற்றப்படுட்டு, நேர்மறை ஆற்றல்கள் ஈர்க்கப்படுகின்றது.
எப்போதும் பண மூட்டையுடன் இருக்கும் குபேரன் பணத்தின் பணத்தின் கடவுளாகவே பார்க்கப்படுகின்றார்.
வீட்டில் குபேரன் சிலை வைப்பதன் மூலம் கடன் தொல்லைகள் அகன்று செல்வ செழிப்பு அதிகதிக்கும் என்பது ஐதீகம்.
சிரிக்கும் குபேரன் சிலையானது நம்மையும் அறியாமல் நமது முகத்தில் சிரிப்பை கொண்டுவரும் அளவுக்கு நேர்மறை ஆற்றல் வாய்ந்தாக இருப்பதால், அந்த நேர்மறையில்தான் உண்மையான அதிர்ஷ்டம் இருப்பதாகவும் நம்பப்படுகின்றது.
காலையில் குபேரர் சிலையை நீங்கள் எழுந்ததும் பார்த்தால் அந்த நாள் மிகவும் மகிழ்ச்சி மற்றும் அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக அடையும்.
வாஸ்து படி குபேரன் சிலையை வீட்டின் கதவுக்கு அருகில் வைப்பது சிறந்ததாகும். இதனால் வீட்டிற்குள் வரும் போதும் பார்க்கலாம், வெளியே செல்லும் போதும் பார்கலாம். இப்படி வைப்பதால் பணத்துக்கும் செல்வ செழிப்புக்கும் பஞ்சமே இருக்காது.