அம்பானி குடும்பத்துடன் கைக்கோர்க்கும் நயன்தாரா

நடிகை நயன்தாரா தன்னுடைய 9 ஸ்கின் அழகு சாதன பொருட்களின் விற்பனைக்காக அம்பானி மகளின் கம்பனியுடன் இணைந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

9Skin நிறுவனம்

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் தான் நடிகை நயன்தாரா.

இவர், நடிப்பில் மட்டுமின்றி வியாபாரத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் நயன்தாரா ஸ்டார்ட் அப் நிறுவனம், லிப் பாம், ரியல் எஸ்டேட், திரைப்பட தயாரிப்பு, பெண்களுக்கான நாப்கின் நிறுவனம் ஆகிய நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறார்.

கடந்த ஆண்டு 9 ஸ்கின் என்கிற அழகு பொருட்கள் தயாரிப்பிலும் களமிறங்கியுள்ளார். இது தொடர்பாக புகைப்படம் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன.

9Skin நிறுவனத்தின் மூலம், Skintillate Booster Oil, Rejuvenate Night Cream, Eternelle Anti-Aging Serum, Illuminate Glow Serum மற்றும் Revive Day Cream உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

மலேசியா- கோலாலம்பூரில் இந்த பொருட்கள் தொடர்பான பிரமாண்ட நிகழ்ச்சி நடந்தது. 9skin நிறுவனம் மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள் ரூபாய் 999 முதல் அதிகபட்சமாக 1899 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

குறுகிய காலத்திலேயே, 9skin அழகு சாதன பொருட்கள் மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பை பெற்றதால் தொடர்ந்து வியாபாரத்தை விரிவுப்படுத்த நினைத்த நயன்தாரா, அம்பானி மகளான இஷா அம்பானியுடன் கைகோர்த்துள்ளார்.

அம்பானி குடும்பத்துடன் ஒப்பந்தம்

இஷா அம்பானியின் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் பங்குதாரராக நயன்தாரா மாறியுள்ளார். இஷா அம்பானி தலைமையிலான இயக்கும் (Tira ) தீராவுடன் இணைந்து பணியாற்றும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில், 9ஸ்கினின் தயாரிப்புகள் ரிலையன்ஸ் ரீடெய்ல்ஸ் இணையதளத்திலும் கிடைக்கும்.Tira மூலம் விற்பனையாகும் இந்த பொருட்கள் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், கனடா, இங்கிலாந்து, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளது.

இது குறித்து பேசிய நயன்தாரா, “டிராவுடன் இணைந்து எங்களின் வியாபாரத்தை விரிவுப்படுத்துவதில் எங்களுக்கு மகிழ்ச்சி. நெறிமுறைகளோடு தோல் பராமரிப்பு தீர்வுகளை வழங்குவதே எங்கள் நோக்கம்..” என பேசியுள்ளார்.