காதலியை பேருந்தில் இருந்து தள்ளி விட்ட காதலன்!

தன்னுடைய கள்ளக்காதலியை பஸ்ஸில் இருந்து கீழே தள்ளிவிட்டதாகக் கூறப்படும் காதல​னை கைது செய்துள்ளதாக தம்புள்ளை​ பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் வெலிகந்த, சிங்கபுர பிரதேசத்தில் வசிக்கும் இருபத்தி நான்கு வயதுடைய திருமணமானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

பேருந்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட காதலி என கூறப்படும் பலுகஸ்வேவ பகுதியைச் சேர்ந்த பெண் காயமடைந்த நிலையில் தம்புள்ளை ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த காதலர்கள் இருவரும் பொலன்னறுவையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் பொலன்னறுவையில் இருந்து பேருந்தில் ஏறியுள்ளனர்.

பேருந்தில் ஏறியதில் இருந்து இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்தே காதலியை காதலன் தள்ல்விட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.