கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த நடிகை நயன்தாரா நடிப்பிற்கு வந்ததன் பின்னர் இந்த மதத்திற்கு மாறியதற்கான காரணத்தை அவரே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
நடிகை நயன்தாரா, கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். நயன்தாராவின் இயற்பெயர் டயானா மரியம் குரியன். ஆனால் இவர் சினிமா துறைக்குள் நுழைந்ததும் இந்து மதத்திற்கு தன்னை மாற்றிக்கொண்டார்.
இந்த செய்தி ஊடக அறிக்கையின்படி இவர் கடந்த 2011ம் ஆண்டு சென்னையில் உள்ள ஆரிய சமாஜ் கோவிலுக்கு சென்று இந்து மதத்திற்கு மாறினார் என்று கூறப்படுகின்றது.
இதற்கான காரணத்தை ஒரு பேட்டியின் போது வெளிப்படையாக அவரே ரசிகர்களுக்கு கூறியுள்ளார். அவர் கூறியபோது ‘ஆம், நான் இந்து, இது எனது சொந்த முடிவு. நான் முழு நிகழ்வையும் உற்சாகத்தோடும் நம்பிக்கையோடும் செய்தேன்’ என்று தெரிவித்திருக்கிறார்.
அந்த வகையில் நடிகை நயன்தாரா வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஆரிய சமாஜ் கோயிலுக்குச் சென்று, ‘சுத்தி கர்மா’ என்ற வேத சுத்திகரிப்புச் சடங்கின் அனைத்து நடைமுறைகளையும் பக்தியுடன் பின்பற்றினார் என்று ஆரிய சமாஜுகு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.
இவர் இந்த முடிவு எடுத்ததற்கு காரணம் அவரது முன்னாள் காதலர் நடிகர் பிரபுதேவா என கூறப்படுகின்றது. நயன்தாரா பிரபுதேவாவை மணக்க முடிவு செய்திருந்தார்.
அவரை திருமணம் செய்வதற்காகவே நடிகை நயன்தாரா, கிறிஸ்தவத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறினார் என்று கூறப்படுகிறது. ஆனால் சில காரணங்களால் இவர்களது உறவு முறிந்தது ஆனால் நயன்தாரா இப்போதும் இந்து மதத்தை பின்பற்றி வருகிறார்.
தற்போது விக்னேஷ் சிவனை 7 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்துள்ளார். தற்போது இந்த தம்பதியினருக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளது.