தூங்கி எழுந்ததும் போன் பார்க்கும் பழக்கம் கொண்டவர்களா நீங்கள் அப்போ கட்டாயம் இதனை தெரிந்து கொள்ளுங்கள்

தூங்கி எழுந்ததும் செல்போன் பார்க்கும் பழக்கம் கொண்டவர்களுக்கான எச்சரிக்கை பதிவே இதுவாகும்.

இன்றைய காலத்தில் செல்போன் என்பது ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத பொருளாகியுள்ள நிலையில், காலையில் எழுந்ததும் முதலில் போனை பார்க்கும் பழக்கமும் அதிகரித்துள்ளது.

ஆரம்பத்தில் இது பதிப்பு இல்லாதது போன்று தோன்றினாலும், இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும் இந்த நிலையை NoMoPhobia (No Mobile Phobia) என்று கூறுகின்றனர். அதாவது செல்போன் பயன்படுத்தாமல் இருக்க முடியாத நிலையைக் குறிக்கின்றது.

என்னென்ன பாதிப்பை ஏற்படுத்தும்?
நாம் போன் பயன்படுத்தும் போது அதிலிருந்து வெளிவரும் ப்ளூ லைட் உமிழ்வு, தூக்கத்தினை ஒழுங்குபடுத்தும் ஹார்மோனான மெலடோனின் உற்பத்தியை பாதிக்கின்றது. தூங்கி எழுந்ததும் போன் பார்ப்பது நாள் முழுவதும் சோர்வுக்கு வழிவகுக்கின்றது

நீங்கள் வைத்திருக்கும் நோட்டிவிக்கேஷன் உங்களது புதிய நாளை தொடங்கும் முன்பு பதட்டம், மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும். இந்த மன அழுத்தம் கார்டிசோல் அளவுகள் மற்றும் அதிக இதயத் துடிப்பு, மனநிலை மற்றும் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

காலையில் எழுந்ததும் மொபைல் பார்ப்பது, உங்களது காலை வேலைகளை மறக்கடிக்கவும், தியானம், உடற்பயிற்சி இவற்றினை மறக்கடிக்கும். கவனச்சிதறல் ஏற்படுவதுடன், கல்வி மற்றும் தொழில்முறை சூழல்களில் உற்பத்தி திறனையும், செயல்திறனையும் குறைக்கின்றது.