உடலில் இருக்கும் முக்கிய உறுப்புகளில் ஒன்று சிறுநீரகம்.
இது நம் உடலில் இருக்கும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் தாக்கம் செலுத்துகின்றது. சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்வதில் உணவு முறை முக்கிய பங்கு வகிக்கின்றது.
சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தில் பழங்கள் இன்றியமையாதது. அதிக நீர் உள்ளடங்களான பழங்களை தினமும் சாப்பிட்டு வந்தால் உங்களின் சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
அத்துடன் பழங்களில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இவை வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்றத்தின் அழுத்தத்தைக் குறைத்து உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றும்.
மனித உடலில் சரியான திரவ சமநிலையை பராமரிக்க வேண்டும். இதுவே சிறுநீரகங்களின் செயல்பாட்டை ஆரோக்கியமாக வைத்து கொள்கிறது.
அந்த வகையில், சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பழங்கள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் பழங்கள்
1. தர்பூசணியில் உள்ள நீர்ச்சத்து உடலை நீரேற்றமாக வைத்து கொள்ளும். இதிலிருக்கும் லைகோபீன் மற்றும் பொட்டாசியம் சிறுநீரகத்தின் செயல்பாட்டை சீராக வைத்து கொள்ளும்.
2. எலுமிச்சை பழத்தில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது சிறுநீர் கழிக்கும் உணர்வை அடிக்கடி துண்டும். இதனால் சிறுநீரக கற்கள் உருவாவது தடுக்கப்படுகின்றது. நம் உடலில் இருக்கும் நச்சுக்களும் சிறுநீர் வாயிலாக வெளியேறும்.
3. பெர்ரி வகைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை சிறுநீர் பாதையில் நோய்த்தொற்றுகள் ஏற்படுவது தடுக்கப்படுகின்றது. ஒட்டுமொத்த சிறுநீரக ஆரோக்கியத்திற்கு இந்த வகை பழங்கள் பெரிதும் உதவியாக உள்ளன. அழற்சி எதிர்ப்பு பண்புகள் பலனை இந்த பழங்களில் முழுமையாக பெறலாம்.
4. கிரான்பெர்ரியில் புரோந்தோசயனிடின்கள் (பிஏசி) உள்ளது. இது சிறுநீரகங்களின் மேம்பாட்டிற்கு உதவியாக உள்ளது. சக்திவாய்ந்த இந்த பழங்கள் சாப்பிடும் ஒருவருக்கு சிஸ்டாடின் சி என்ற புரதம் குறைவாக இருக்கும்.