இரவு நேரத்தில் சாதம் சாப்பிடக்கூடாது என்று கூறுவதற்கான காரணத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
அரிசி சாதம்
இந்தியாவில் அரிசி சாதம் என்பது மிகவும் முக்கியமான உணவாக பார்க்கப்படுகின்றது. அதிலும் தென்னிந்தியாவில் பெரும்பாலான நபர்களின் உணவாக இருப்பதே அரிசி சாதம்.
அரிசியை பயன்படுத்தி சாதம் மட்டுமின்றி புலாவ், பிரியாணி என்று சமைத்து சாப்பிடுகின்றனர். ஏனெனில் சாதம் நமக்கு ஒரு நிறைவான உணர்வை கொடுக்கின்றது.
அதிக கார்போஹைட்ரேட் உள்ளடக்கம் காரணமாக நமது உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குவதுடன், புரதம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு மற்றும் பொட்டாசியம் போன்ற பல்வேறு தாதுக்கள் உள்ளன.
இரவில் அரிசி சாதம் சாப்பிடக்கூடாது என்பதற்கான காரணம் என்னவெனில், வெள்ளை அரிசியில் கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ள நிலையில், இவை உடல் ஆற்றல் உற்பத்திக்காக குளுக்கோஸாக உடைக்கின்றது. இரவில் அதிகளவில் ஆற்றல் தேவையில்லை என்பதால், இந்த குளுக்கோஸ் அளவானது கொழுப்பாக சேமித்து வைக்கப்படுகின்றது.
சாதம் குளிர்ச்சியான விளைவைக் கொண்டுள்ளதால், சிலருக்கு இரவில் சாப்பிடுவது சளி பிடிக்கவும் வாய்ப்புள்ளது.
நீரிழிவு நோயாளிகள் சாதம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் ரத்த சர்க்கரை அளவை உயர்த்துகின்றது. மிதமான அளவில் பழுப்பு அரிசியை எடுத்துக் கொள்ளலாம்.
எடையைக் குறைக்க நினைப்பவர்கள் இரவில் சாதம் போன்ற கார்போஹைட்ரேட் உணவுகளைத் தவிர்க்கவும். இதற்கு பதிலாக நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த லேசான உணவுகளில் கவனம் செலுத்தவும்.
அதிக நேரம் அமர்ந்து கொண்டு வேலை செய்பவர்கள் சாதத்தை உட்கொள்வதை தவிர்க்கவும். ஏனெனில் கொழுப்பு குவிப்பு மற்றும் அஜீரணத்திற்கு வழிவகுக்குமாம்.
சாதம் சாப்பிடுவதற்கு சிறந்த நேரம் மதியம் ஆகும். காலை மற்றும் மதிய உணவில் சாதத்தை எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்க வேண்டும். ஆனால் இரவில் சாதத்தை எடுத்துக் கொள்ள வேண்டாம்.