தேங்காய் விலை தொடர்பில் வெளியாகிய செய்தி!

கைத்தொழில்துறையினருக்கு தேவையான தேங்காயை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்தில் தேங்காய் விலை நிச்சயம் குறையும் என தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

தேங்காய் உற்பத்தி குறைவு மற்றும் இறக்குமதிக்கான பாரிய தேவையினால் தேங்காய் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அதன் தலைவர் சாந்த ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தேங்காய் பால் இறக்குமதிக்கு அனுமதி

தேவைக்கேற்ப விநியோகத்தை வழங்குமாறு தொழில் அதிபர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய, தேங்காய் பால் இறக்குமதிக்கு அமைச்சரவையின் அனுமதியைப் பெறுவதற்கான பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன்படி, எதிர்காலத்தில் தேங்காய் விலை நிச்சயம் குறைவடையும் என்பதால், தேங்காய்களை கையிருப்பு செய்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட தேங்காய் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வை அடுத்து அரசாங்கம் நியாய விலையில் தேங்காய் விநியோகத்தை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.