சைபர் தாக்குதல் ஏற்படுத்தக்கூடிய நாடுகள் பட்டியலில் இந்தியாவையும் சேர்க்க கனடா தீர்மானித்துள்ளது.
கனடாவில் வசித்த சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர நெருக்கடியை அது மேலும் தீவிரப்படுத்தியது.
இந்திய அரசின் அறிவு மற்றும் அனுசரணையுடன் தனது நாட்டுக்கு எதிராக உளவு பார்ப்பதாக கனடா குற்றம் சாட்டுகிறது. இதனால், கனேடிய இணைய இடர் மதிப்பீட்டுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஐந்தாவது நாடாக இந்தியா உள்ளது.
அதேவேளை இந்தியாவுக்கு முன், சீனா, ரஷ்யா, ஈரான், வடகொரியா ஆகிய நாடுகளும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.