யாழில் வன்முறைக் கும்பல் அட்டகாசம் !

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையில் உள்ள வீடொன்று நேற்று (03) இரவு 11 மணியளவில் இனந்தெரியாதவர்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், இரவு 11 மணியளவில் வீட்டார் நித்திரையில் இருக்கும் போது மோட்டார் சைக்கிளில் வாள்களுடன் வந்த 4 பேர் வீட்டின் யன்னல் கண்ணாடிகளை உடைத்தும் மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்திவிட்டு சென்றனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

எனினும் சம்பவம் இடம்பெற்றமைக்கான காரணம் வெளியாகவில்லை.