புத்தர் சிலையை எங்கு எப்படி வைக்க வேண்டும்

வீடுகளில் புத்தர் சிலைகளை வைக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன? வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்படும் புத்தர் நிறங்கள் என்னென்ன? மருந்து புத்தர் சிலை என்றால் என்ன? சுவர் ஓவியத்தில் புத்தர் வரையலாமா?

அமைதி, கருணை, நல்லொழுக்கம், நல்லெண்ணத்தின் அடையாளமாகவே புத்தர் சிலைகள் பார்க்கப்படுகின்றன. புத்தரின் சிலையை வீட்டில் வைத்தாலே அமைதி, செழிப்பு உண்டாகும்.

அதைவிட முக்கியமாக புத்தரின் முகத்தில் ஆன்மீக சக்தியை நேரடியாகவே அனுபவிக்க முடியும். காரணம், புத்தர் சிலையை பார்க்கும்போது நம்முடைய மனதிலும் நல்லெண்ணமும் கருணையும் ஏற்படும். அமைதி முகம் கொண்ட புத்தரின் சிலை முன்பு தியானம் செய்தால், நம்முடைய மனமும் அமைதிப்பெறும். சிலைகள் திசைகள்: புத்தர் சிலைகளில் பலவகை உள்ளன.. ஒவ்வொரு புத்தர் சிலையை பற்றியும், அதன் பலன்கள் பற்றியும், அதன் திசைகள் பற்றியும் வாஸ்துவில் நிறையவே சொல்லப்பட்டுள்ளது. அதேபோல, புத்தர் சிலைகளை எப்படி பராமரிக்க வேண்டும்? எப்படி வீடுகளில் வைத்திருக்க வேண்டும்? என்பது குறித்தும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, புத்தர் சிலையை ஜன்னல் அல்லது கதவுக்கு எதிரே வைக்கக்கூடாது. படுக்கை அறையில், சிறிய மரச்சாமான்களில் வைக்கக்கூடாது.. ஃபிரிட்ஜ் உட்பட மின்சாத பொருட்கள் மீது வைக்கக்கூடாது.. பெரிய சாதனங்களுக்கு பக்கத்தில் வைக்கக்கூடாது. அப்படி வைக்கும்போது, பெரிய பொருள்கள் நேர்மறை அதிர்வுகளை தடுத்துவிடும். சமையலறை, கழிவறை அருகில் வைக்கக்கூடாது. ஸ்டோர்ரூம், வாஷிங் ரூம்களில் வைக்கக்கூடாது. தரையிலும் வைக்கக்கூடாது. தரையிலிருந்து 3 முதல் 4 அடி உயரத்தில் வைக்கப்பட வேண்டும்.

எப்படி வைக்க வேண்டும்: நேர்மறை ஆற்றலை அதிகரிக்கக்கூடியதாக கருதப்படும் புத்தர் சிலைகள், எப்போதுமே இருப்பிடம், அதன் மதிப்பை அதிகரிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். வெளிச்சம் நிறைந்த இடமாக இருக்க வேண்டும். புத்தர் சிலை வைக்கும் இடம் எப்போதும் சுத்தமாகவே இருக்க வேண்டும். புத்தர் சிலையை சுத்தமான மேஜை மீதோ அல்லது அலமாரியிலோ வைக்கலாம்.. குழந்தைகள் படிக்கும் அறையில் வைக்கலாம். புத்தர் சிலைகளை வீட்டில் வைக்க விரும்புவோர் கண்டிப்பாக வெள்ளை, மஞ்சள் அல்லது பழுப்பு நிறங்களில் தான் வைக்க வேண்டும். இதனை தவறும் பட்சத்தில் புத்தர் சிலையால் வரும் பலன்கள் சரியாக வந்து சேராமல் இருக்கும். அதேபோல, மங்களகரமாக கருதப்படும் புத்தர் சிலையை வெறுமையாக வைக்காமல், அதன் பக்கத்திலேயே ஏதாவதொரு பித்தளை, அல்லது பீங்கான் அல்லது கண்ணாடி பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில், சில பூக்களையும் போட்டு வைக்கலாம். புத்தர் மருத்துவம்: ஆரோக்கியம் தரக்கூடியதாக புத்தர் மருந்து சிலைகள் பார்க்கப்படுகின்றன.. இந்த சிலையின் வலது கை கீழ்நோக்கியும், விரல்கள் தரையை நோக்கியும், உள்ளங்கை வெளியேயும், இடது கையில் மூலிகைகளின் கிண்ணமும் காணப்படும். வலது கை புத்தரை ஆசிர்வதிப்பதாகும்.

புத்தர் மருத்துவம் என்பது மனதையும், உடலையும் குணப்படுத்துவது மற்றும் சிகிச்சை ஆற்றல்களை உருவாக்குவதாகும். பல மருந்து புத்தர்கள் நீல நிறத்திலேயே காணப்படும்.. இந்த சிலைகளை வைத்திருப்பதால், உடல்நலக்குறைவுகளிலிருந்து மீண்டு, ஆசீர்வாதங்களை பெறலாம்.. புத்தர் சுவர் ஓவியம்: புத்தர் சுவர் ஓவியமும், நல்ல ஆற்றலையும் செழிப்பையும் ஈர்க்கக்கூடியவை.. எனவே, வீட்டின் பிரதான நுழைவாயில், இருக்கலாம்.. வடக்கு மற்றும் வடகிழக்கு ஆகியவை புத்தர் ஓவியங்களுக்கு ஏற்றதாக கருதப்படுகிறது. இந்த திசைகள் வாஸ்து சாஸ்திரத்தின்படி மங்களகரமானதாகவும் கருதப்படுகிறது. இது மனதிற்கு மனநிறைவையும் பெற்று தருகிறது. எதிர்மறை ஆற்றல்களையும் வீட்டிற்குள் நுழைவதை தடுத்து நிறுத்துகிறது இந்த புத்தர் சுவர் ஓவியம்…!!!