முருகனை வழிபடுபவர்களின் எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் அது நீங்கி விடும் என்பது ஐதீகம். குழந்தை, திருமணம், வேலை என எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும், அது தீர வேண்டும் என்பதற்காக சஷ்டி விரதம் இருந்து வழிபடலாம்.
சஷ்டி விரதம் 3ம் நாள் :
கந்தசஷ்டி விரதத்தின் மூன்றாவது நாள் இந்த ஆண்டு நவம்பர் 04ம் தேதி திங்கட்கிழமை வருகிறது. கந்த சஷ்டி விரதத்தின் மூன்றாவது நாளில் முருகப் பெருமானுக்கு ஷட்கோண தீபம் ஏற்றி வழிபடுபவர்கள் மூன்று தீபங்கள் ஏற்றி வைத்து வழிபட வேண்டும். ஷட்கோண கோலத்தின் மத்தியில் ஓம் என்ற பிரணவ மந்திரத்தை எழுதி, அதைச் சுற்றிலும் உள்ள 6 நட்சத்திரங்களில் “சரவண பவ” என எழுத வேண்டும். முதல் நாளில் “ச” என்ற எழுத்தின் மீதும், 2வது நாளில் “ர” என்ற எழுத்தின் மீதும் தீபம் ஏற்றிய நிலையில், மூன்றாவது நாளில் “வ” என்ற எழுத்தின் மீது தீபம் ஏற்றி வழிபட வேண்டும். காலை, மாலை இரு வேளையும் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும்.
விரதம் இருப்பவர்கள் செய்ய வேண்டியவை :
ஷட்கோண கோலத்தை ஒவ்வொரு முறையும் புதியதாக வரைந்தே அதன் மீது தீபம் ஏற்றி வழிபட வேண்டும். காலையில் ஷட்கோண கோலம் வரைந்து தீபம் ஏற்றி வழிபட்டாலும், மாலையில் மீண்டும் அதை துடைத்து சுத்தம் செய்து விட்டு புதியதாக கோலமிட்டு, அதன் மீது விளக்கேற்ற வேண்டும். காலையில் பயன்படுத்திய பூக்கள், நைவேத்தியங்களை மீண்டும் மாலையில் பயன்படுத்தக் கூடாது. புதியதாக நைவேத்தியம் செய்தே வழிபட வேண்டும். ஏதாவது ஒரு வேளை நைவேத்தியம் செய்து படைத்து விட்டு, மற்றொரு வேளை பழம் அல்லது பால் மட்டும் வைத்து வழிபடலாம். கந்தசஷ்டி விரதத்தின் மூன்றாவது நாளில் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
கந்த சஷ்டி 3ம் நாள் வழிபாட்டு நேரம் :
தானம் செய்வதற்கான நேரம் :
காலை 11 முதல் பகல் 12 வரை
கந்தசஷ்டியில் 3வது நாளில் முருகப் பெருமானுக்கு எலுமிச்சை சாதம் நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும். விரதம் இருப்பவர்கள் சிறிய அளவில் நைவேத்திய பிரசாதத்தை மட்டும் சாப்பிட்டு விரதத்தை தொடரலாம்.