இந்தியாவின் செல்வாக்கு மிக்க தலைவர்கள்

இந்தியாவின் செல்வாக்கு மிக்க தலைவர்கள் பட்டியலில் முதலிடத்தில் பிரதமர் மோடி உள்ளார். எட்டாவது இடத்தை ஸ்டாலின் பிடித்துள்ளார்.

‘இந்தியா டுடே’ இதழ் நாடு முழுவதும் தலைவர்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் செல்வாக்கு மிகுந்த தலைவர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இப்பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார்.

பிரதமர் மோடி
முன்னாள் பிரதமர் நேருவுக்கு பிறகு, தொடர்ந்து 3வது தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் என்ற பெருமை பெற்றார் மோடி. லோக்சபா தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத போதிலும் சமீபத்தில் நடந்த ஹரியானா சட்டசபை தேர்தலில் பிரதமரின் செல்வாக்கு நிரூபணம் ஆகி உள்ளது. அவரது ஆட்சி காலத்தில் தான், உலகளவில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்து உள்ளது. அமெரிக்காவுடன் நட்புறவை வலுப்படுத்திய நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் ஒரே நேரத்தில் பேசும் வெகு சிலரில் பிரதமரும் ஒருவர்.

மோகன் பகவத்

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இரண்டாவது இடத்தில் உள்ளார்.ஆர்எஸ்எஸ் அமைப்பு பா.ஜ.,வின் உள் கட்டமைப்பிற்குள் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அரசியல் நியமனங்கள், வேட்பாளர்கள் குறித்து இந்த அமைப்பின் கருத்து முக்கியமானதாக உள்ளது. சமீபத்தில் ஹரியானாவில் பா.ஜ., பெற்ற வெற்றிக்கு இந்த அமைப்பு பங்கு மிக அதிகம். புதிய பா.ஜ., தலைவரை தேர்வு செய்வதில் இவரின் ஒப்புதல் மிக முக்கியமானதாக உள்ளது.

அமித்ஷா
மூன்றாவது இடத்தில் இருப்பவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. லோக்சபா தேர்தலுக்கு பிறகு, ஹரியானா சட்டசபை தேர்தலில் இவரின் செல்வாக்கு மீண்டும் வெளிப்பட்டு உள்ளது. அத்வானி மற்றும் ஜி.பி.பண்ட் ஆகியோருக்கு பிறகு நீண்ட நாட்கள் உள்துறை அமைச்சராக உள்ளார். உள்நாட்டு பாதுகாப்பை உயர்ந்தஇடத்தில் வைத்துள்ளார்.

இந்தியாவின் நிர்வாகத்தில் செல்வாக்கு செலுத்தும் நபர்களில் முக்கியமானவர். இவர் பல்வேறு அரசு குழுக்களிலும் உள்ளார். இவரின் கருத்தைகேட்ட பிறகே பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன.