வீழ்ச்சியடையும் தமிழரசுக் கட்சி!

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு வடக்கில் ஆதரவு வீழ்ச்சியடைந்து வருவதால் அரசுடன் இணைந்து அதனைத் தக்க வைத்துக்கொள்வதற்குரிய தேவைப்பாடு ஏற்பட்டுள்ளது என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.

இலத்திரனியல் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “மங்கள சமரவீரவுக்கும், சுமந்திரனுக்கும் (Sumanthiran) நல்லுறவு இருந்தது. மங்கள ஜனாதிபதியாகி இருந்தால் சுமந்திரன் நிச்சயம் அமைச்சுப் பதவியை ஏற்றிருப்பார்.

அரச பலம்
அடுத்தது சுமந்திரனுக்கும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையில் சிறந்த நட்பு உள்ளது. இருவரும் இணைந்து செயற்படக்கூடியவர்கள்.

இன்று மங்கள உயிருடன் இல்லை. அடுத்தது சுமந்திரனுக்கும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையில் சிறந்த நட்பு உள்ளது. இருவரும் இணைந்து செயற்படக்கூடியவர்கள்.

எனவே, அரச பலம் மூலம் அதனைத் தக்க வைத்துக்கொள்வதற்குரிய தேவைப்பாடு அவர்களுக்கு உள்ளது” என்றார்.