பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மூவர் நீதிபதி இளஞ்செழியனால் விடுவிப்பு!

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான தீங்கு விளைவிக்கும் ஆயுதங்களை உடமையில் வைத்திருந்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட மூவர் குற்ற மற்றவர்கள் என தெரிவித்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் நேற்று (6) விடுவிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா பெரியபுளியாங்குளத்தை சேர்ந்த, சிறி சுப்பிரமணியம் கிரிசா, கந்தப்பு கயேந்திரன், பூந்தோட்டத்தை சேர்ந்த காகை சிங்கம் காந்தரூபன், ஆகிய சந்தேகநபர்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டனர்.

கடந்த 2019ஆண்டு தைமாதம் சாளம்பைக்குளம் பகுதியில் தீங்குவிளைவிக்க கூடிய ஆயுதங்களான கிளைமோர் குண்டுகளை உடமையில் வைத்திருந்தனர் என்று கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த மூவரும் கைதுசெய்யப்பட்டனர்.

காவல்துறை விசாரணையின் அடிப்படையில் பி அறிக்கை தயார்செய்யப்பட்டு வவுனியா நீதவான் நீதிமன்றில் அவர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு தொடர்பில் நீதிமன்றில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தநிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

அவர்களுக்கு எதிராக நீதவான் நீதிமன்றில் விசாரணைகள் நிறைவுபெற்று சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைகள் பெறப்பட்டு 1996 ஆண்டின் 18 ஆம் இலக்க தீங்கு விளைவிக்கும் ஆயுதசட்டம் 2(1)ஆ பிரிவின் கீழ் குற்றம் புரிந்துள்ளதாக மூவருக்கும் எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரசதரப்பு வழக்கு தொடுனரால் சந்தேகத்துக்கு அப்பால் இறை ஒப்புச்சாட்சியங்கள் ஒப்பிக்க தவறியமையால் சட்டவிதிகளின் வழக்கத்தில் வவுனியா மேல்நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மா.இளஞ்செழியன்
மேல்நீதிமன்றில் இது தொடர்பான வழக்கு விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தநிலையில் நேற்றையதினம் தீர்ப்புக்காக தவணையிடப்பட்டிருந்தது. அந்தவகையில் இன்று தீர்ப்பை அறிவித்த மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இவர்கள் மூவரையும் விடுவித்து தீர்ப்பளித்தார்.

குறித்த வழக்கில் இரசாயனபகுப்பாய்வு அறிக்கை தவிர்ந்து எவ்விதமான ஒப்புதல் சான்றிதழ்களும் வழக்கு தொடுனரினால் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரசதரப்பு வழக்கு தொடுனரால் சந்தேகத்துக்கு அப்பால் ஒப்பிக்க தவறியுள்ளதாக நீதிபதி மா.இளஞ்செழியன் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

அரச தரப்பின் நியாயமான சந்தேகங்களிற்கு அப்பால் தவறு இழைக்கப்படவில்லை என்ற அடிப்படையில் பிரிவு 134இன்சான்று கட்டளைசட்டத்தின் பிரகாரம் தீர்ப்பளிக்கப்பட்டு குறித்த மூவரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் அவர் அறிவித்தார்.