கொழுப்பைக் குறைக்கும் கொள்ளு சட்னி

பொதுவாக பெரும்பாலான வீடுகளில் காலையுணவாக இட்லி, தோசை தான் செய்வார்கள்.

தினமும் இதனை காலையுணவாக எடுத்து கொள்ளும் பொழுது ஒரு கட்டத்திற்கு மேல் அதில் சலிப்பு ஏற்படும். இதனால் இட்லி, தோசைக்கு வைக்கும் சட்னியில் மாற்றத்தை ஏற்படுத்தினால் வீட்டிலுள்ளவர்கள் உங்கள் சமையலை விரும்பி சாப்பிடுவார்கள்.

தினமும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னி என்று செய்து சலித்து விட்டால் இனி கொள்ளு வைத்து சட்னி செய்து பார்க்கலாம்.

அந்த வகையில் உடலுக்கு ஏகப்பட்ட ஆரோக்கிய பலன்களை கொடுக்கும் கொள்ளை வைத்து எப்படி சட்னி செய்யலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
* நல்லெண்ணெய் – 3 டீஸ்பூன்

* கொள்ளு – 100 கிராம்

* வரமிளகாய் – 4

* பூண்டு – 4 பல்

* புளி – சிறிய துண்டு

* தேங்காய் – 1 கையளவு (நறுக்கியது)

* சீரகம் – 1/2 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* தண்ணீர் – தேவையான அளவு

தாளிப்பதற்கு தேவையான பொருட்கள்

* நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்

* கடுகு – 1/4 டீஸ்பூன்

* வரமிளகாய் – 1

* கறிவேப்பிலை – 1 கொத்து

* பெருங்காயத் தூள் – சிறிது

சட்னி செய்முறை
முதலில் ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து அதில் கொஞ்சமாக நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கொள்ளை பொட்டு பொன்னிறமாகும் வரை வறுத்தெடுக்கவும்.

பின்னர், அதில் வரமிளகாய், பூண்டு, புளி, தேங்காய், சீரகம் சேர்த்து நிறம் மாறும் வரை வறுக்கவும். அதனை இறக்கி ஒரு தட்டில் கொட்டி குளிர விடவும்.

வறுத்த பொருட்களுடன் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து பொடியாக அரைத்து கொள்ளவும்.

தொடர்ந்து, அதே வாணலியை அடுப்பில் வைத்து தாளிப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சூடானதும், அதில் கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து சட்னியில் கொட்டி கலந்து விடவும், சட்னிக்கு நீர் போதாமல் இருந்தால் தேவையான அளவு ஊற்றிக் கொள்ளலாம்.

கலந்து விட முன்னர் சட்னியை மிதமான வெப்பநிலையில் கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான கொள்ளு சட்னி தயார்!