வடமாரச்சியில் சர்ச்சையை ஏற்ப்படுத்திய சுவரொட்டி!

யாழ்ப்பாணத்தில் மாமனிதர் இரவிராசின் மனைவி சசிகலா அவர்களின் புகைப்படத்தை பாவித்து ஆளமாறட்ட மோசடி தேர்தல் சுவரொட்டிகளை சிறீதரன் தரப்பு ஒட்டியுள்ளதாக சசிகலா ஆதரவு தரப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இலங்கைத்தமிழரசுக்கட்சியின் வீட்டுச் சின்னத்தில் விருப்பு இலக்கம் 7 இல் போட்டியிடுகின்ற சிறீதரன் அவர்களின் பிரச்சார சுவரொட்டிகளில் , சங்குச்சின்னத்தில் போட்டியிடும் தென்மராட்சியின் வேட்பாளர் திருமதி இரவிராஜ் சசிகலா அவர்களின் புகைப்படத்தை, தனது பிரச்சார சுவரொட்டிகளில் பயன்படுத்தி மோசடி செய்யும் பிரச்சார சுவரொட்டிகள் தென்மராட்சியின் பலபாகங்களிலும் ஒட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தென்மராட்சி மக்களின் வாக்குகளை அபகரிக்கும் முயற்சி

தென்மராட்சி பிரதேசத்தில் அந்தப் பிரதேசத்தைச் சார்ந்த முன்னைநாள் நாடளுமன்ற உறுப்பினர் இரவிராஜ் அவர்களின் துணைவியார் இம்முறை சங்குச் சின்னத்தில் விருப்பு இலக்கம் 7 இல் போட்டியிடுகின்றார்.

அதேவேளை கடந்த முறை இடம்பெற்ற பாரளுமன்ற தேர்தலில் திருமதி இரவிராஜ் , இலங்கைத்தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தராகவும் தமிழரசுக்கட்சியின் வேட்பாளராகவும் போட்டியிட்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தார் .

அந்த வாக்கு வங்கி இன்னமும் யாழ்மாவட்டத்திலும் , குறிப்பாக தென்மராட்சிப் பகுதியிலும் ஈவ்வாறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது . அதேவேளை வரும் நாடாளுமன்ற தேர்தலில் , அண்மைய அவதானிப்புகளில் தென்மராட்சியின் கணிசமான வாக்குகள் திருமதி ச சிகலா இரவிராஜ் அவர்களுக்கு விழக்கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது.

அதேசமயம் , முன்னைநாள் தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர் என்ற அடிப்படையிலும் , சிறீதரனுக்கும் ச சிகலாவுக்குமான விருப்பு வாக்குகள் 7 ஆக இருப்பதனடிப்படையிலும் , தென்மராட்சி மக்களின் வாக்குகளை சிறீதரன் தரப்பு அபகரிக்கும் முயற்சியில் உள்ளதாக சசிகலா தரப்பினர் கூறுகின்றனர்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் தென்மராட்சி மக்களை ஏமாற்றும் நோக்கில் , திருமதி சசிகலா இரவிராஜ் அவர்களின் புகைப்படத்தை ஆள மாறட்டம் செய்து வாக்குமோசடி செய்யக்கூடியவகையில் , மேற்படி பிரச்சார தேர்தல் சுவரொட்டி ஒட்டப்பட்டிருக்கலாம் என சசிகலா தரப்பினர் விசனம் வெளியிட்டுள்ளனர்.