பாடலுக்கு ஸ்வரம் அமைத்து நடுவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சிறுமி!

தற்போது நடைபெற்று வரும் சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் கண்ணம்மா பாடலை பாடி நடுவர்களை கவர்ந்துள்ளார்.
சரிகமப
தற்போது சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ் இன் மெஹா ஓடிசன் நடைபெற்று வருகின்றது. இதில் பல குழந்தைகள் தங்கள் வசீகர குரலால் நடுவர்களை கவர்ந்து தெரிவாகி வருகின்றனர்.

இந்த நிலையில் தான் ஹர்ஷினி என்ற 10 வயது சிறுமி “கண்ணம்மா கண்ணம்மா“ பாடலை பாடி நடுவர்களின் பாராட்டுக்களை பெறுகின்றார். இவர் இந்த பாடலை சாதாரணமாக பாடியது மட்டமல்லாமல் அந்த பாடலின் சாயலில் அதற்கேற்ற ஸ்வர வரிசையும் பாடி நடுவர்களை அசர வைக்கிறார்.

இந்த சிறுமி பாடும் போது அந்த பாடலுக்கான ஸ்ருதி சங்கதி எல்லாம் அப்படியே அமைகிறது என நடுவர்கள் பாராட்டி எதிர்வரும் சுற்றுக்களுக்கு தெரிவாக்குகின்றனர்.

இதற்கு ரசிகர்கள் ஆர்வமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். அதிலும் ஒருவர் “அய்யோ இந்த சீசன் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும் போல all babys super voice“ என கமன்ட் செய்துள்ளார்.