அறுகம் குடா தொடர்பில் அமெரிக்காவிடம் இலங்கை முன்வைத்துள்ள கோரிக்கை!

அறுகம் குடா(Arugam bay) தொடர்பில் அமெரிக்கா விடுத்த பயண எச்சரிக்கையை அந்நாடு நீக்க வேண்டும் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த கோரிக்கையை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்(Vijitha Herath)விடுத்துள்ளார் என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி அறுகம் குடா பகுதியில் தாக்குதல் இடம்பெறலாம் என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் வேண்டுகோள் விடுத்தது.

அத்துடன், அறுகம் குடாவில் சுற்றுலாப்பயணிகள் அதிகமாக காணப்படும் பகுதிகளில் தாக்குதல் இடம்பெறலாம் என நம்பகதன்மை மிக்க தகவல்கள் கிடைத்துள்ளதாக அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டது.

இந்நிலையிலேயே அமெரிக்கா தனது நாட்டு பிரஜைகளை அறுகம் குடா பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு பயண எச்சரிக்கையை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.