பொதுத் தேர்தலுக்காக வீடு திரும்பியவர் உயிரிழப்பு!

பொதுத் தேர்தலுக்காக வீடு திரும்பிய போது இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்துச் சம்பவம் ஹொரணை, கொனபொல பிரதேசத்தில் இன்று(12.11.2024) இடம்பெற்றுள்ளது.

விபத்துச் சம்பவம்
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், நாளை மறுதினம்(14) நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு வாக்களிப்பதற்காக பிலியந்தலையில் இருந்து மித்தெனிய கிராமப் பகுதியை நோக்கி முச்சக்கர வண்டியில் நால்வர் பயணித்துள்ளனர்.

இதன்போது, அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டி லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஏனைய மூவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.