சூரியனை சுற்றி வரும் விண்கல் ஒன்று நாளை பூமி மீது மோதலாம் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஸ்பேஸ் ராக் 99942 Apophis என்ற விண்கல் ஒன்று பூமிக்கு அருகில் நாளை (13) வருவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விண்கல் 450*170 மீட்டர் அளவு கொண்டதாகவும் மற்றும் இது பூமி மீது விழுந்தால் சுமார் 100 அணுகுண்டுகள் பூமியில் வெடித்த சேதத்தை ஏற்படுத்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குழப்பத்தின் கடவுள் என விஞ்ஞானிகளால் வர்ணிக்கப்படும் இந்த விண்கல் நாளை பூமியிலிருந்து சுமார் 19,000 மைல்கள் (சுமார் 30,500 கி.மீ) தூரத்தில் கடந்து செல்லும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விண்கல்லை நாசா விஞ்ஞானிகள் கடந்த 2004 ஆம் ஆண்டே கண்டறிந்துவிட்டதாகவும் ஆனால் கடந்த 20 வருடங்களாக விஞ்ஞானிகளுக்கு இது பெரும் தலைவலியாக மாறியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விண்கல் நாளை பூமிக்கு அருகிலதான் வந்து செல்லும் என்றும் புவி ஈர்ப்பு விசையிருந்தும் இது பூமியின் மீது விழாது என்றும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
இந்த விண்கல் அடுத்த 100 வருடங்களிலும் பூமி மீது விழாது என தெரிவிக்கப்படுவதுடன் அந்த விண்கல்லின் பாதை மாறினால் எதிர்பாராத நிகழ்வுகளும் நடக்கலாம் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அபோபிஸ் விண்கல் பூமியின் ஈர்ப்பு விசையை கடந்து சென்றால், நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று சிறுகோள் விஞ்ஞானி ரொனால்ட்-லூயிஸ் பலூஸ் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.