உடல் எடையைக் குறைப்பதற்கு இஞ்சியை நாம் எவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் மக்கள் உடல் எடையைக் குறைப்பதற்கு பழமையான உணவுகளை எடுத்துக் கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
இதற்கேற்ப சமூக வலைத்தளங்களிலும் சித்த மருத்துவம், உணவுகள் குறித்தும் பல மருத்துவர்கள் மக்களுக்கு பயன்படும் தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இஞ்சியை நாம் உணவில் எவ்வாறு சேர்த்துக் கொண்டால், உடல் எடை குறையும் என்பதை மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார்.
காலையில் இஞ்சிச்சாறு, மதியம் சுக்கு , மாலையில் விதை நீக்கிய கடுக்காய் ஆகியவற்றை சாப்பிடுவது நமது உடலில் நல்ல முன்னேற்றத்தை காட்டும் என சித்தர்கள் கூறியுள்ளனர்.
உடல் எடையைக் குறைக்க
நெஞ்சு எரிச்சல், வயிறு உப்புதல், அஜீரன கோளாறு உடையவர்களுக்கு மிகச் சிறந்த மருந்து இஞ்சி சாறு மற்றும் தேன் ஆகும்.
500 மில்லி இஞ்சி சாறுடன் 5 மில்லி தேன் மற்றும் 200 மில்லி சுடு தண்ணீர் சேர்த்து காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.
இதே போன்று மதிய உணவில் ஒரு சிட்டிகை சுக்குடன் நெய் சேர்த்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டு வந்தால் நன்மை கிடைக்கும்.
கடுக்காயில் இனிப்பு, துவர்ப்பு, கசப்பு, புளிப்பு, காரம், உப்பு என அறுசுவைகளும் உள்ளதால் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்குகின்றது.
இதனை நாம் அன்றாடம் பழக்கப்படுத்திக் கொண்டால் உடலில் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதுடன், உடல் எடையையும் குறைக்க முடியும்.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் காலையில் ஆவாரம்பூ டீ குடித்து வந்தால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
ஒரு வாரத்தில் முதல் 2 நாட்கள் நீராகாரம், அடுத்த 2 நாட்கள் இஞ்சி சாறு, அடுத்த 2 நாட்கள் ஆவாரம் பூ குடித்து வந்தால் பல்வேறு நோய்கள் வருவதை தடுக்கலாம் என்று மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார்.