தங்காலையில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் மூன்றரை கோடி ரூபா பெறுமதியான லான்ட் குரூஸர் ரக சொகுசு ஜீப் வாகனமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வாகனமானது தங்காலை காவல் பிரிவுக்குட்பட்ட விதரந்தெனிய பிரதேசத்தில் நேற்று (12) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் பதிவு செய்துள்ளதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலை
இந்த ஜீப் வாகனத்தின் தற்போதைய உரிமையாளரான எம்பிலிபிட்டிய பல்லேகம பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் சட்டத்தரணி ஊடாக மாத்தறை காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இதையடுத்து, கைது செய்யப்பட்டுள்ள அவர் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
மேலும், இந்த வாகனத்தை களுத்துறை பிரதேசத்தில் உள்ள அமைச்சரின் சகோதரர் ஒருவரால் குறித்த வர்த்தகருக்கு விற்பனை செய்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.