மட்டக்களப்பு மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள்
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான மட்டக்களப்பு மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
அதன்படி, இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 96,975 வாக்குகளைப் பெற்று 03 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி (NPP) 55, 498 வாக்குகளைப் பெற்று 01 ஆசனத்தைப் பெற்றுள்ளது.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) 40,139 வாக்குகளைப் பெற்று 01 ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி (TMVP) 31,256 வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில் எந்தவொரு ஆசனங்களையும் கைப்பற்றவில்லை.
results_0200-PE1-ED-12-Batticaloa
2020 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்
இதேவேளை, கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில், அதிகூடிய வாக்குகள் மற்றும் ஆசனங்களை இலங்கைத் தமிழரசுக் கட்சி பெற்றுக் கொண்டது.
இதன்படி, இலங்கைத் தமிழரசுக் கட்சி 79,460 வாக்குளையும் 02 ஆசனங்களையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிகொண்டது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் 67,692 வாக்குகளை பெற்றுக் கொண்டதுடன், 1 ஆசனத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றி கொண்டனர்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் மட்டக்களப்பு மாவட்டத்தில் 34,428 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் மட்டக்களப்பு மாவட்டத்தில் 33,424 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் 1 ஆசனத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.