யாழில் போட்டியிட்ட வைத்தியர் அர்ச்சுனா ஒரு ஆசனத்தைப் பெறுவதற்குப் போதுமான வாக்குகளைப் பெற்றுள்ளதாக வாக்குகள் எண்ணும் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாண (Jaffna) தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி இரண்டு ஆசனங்களையும் தமிழரசுக்கட்சி, ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணி, அ.இ.த.கா. மற்றும் அர்ச்சுனா தலைமையிலான சுயேட்சைக் குழு போன்றன ஒவ்வொரு ஆசனங்களையும் வெற்றிபெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது.
வைத்தியர் அரச்சுனா தலைமையிலான சுயேட்சைக்குழு மொத்தம் 27,855 வாக்குகளைப் பெற்றுள்ளதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுவும், சங்குச் சின்னத்தில் போட்டியிட்ட ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை விட அவர் அதிக வாக்கெடுத்து வெற்றிபெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது,
யாழ் தேர்தல் களத்தில் வைத்தியர் அர்ச்சுனா அதிக சர்சைக்குள்ளாகிய ஒரு வேட்பாளர்.
பல்வேறு அரசியல்வாதிகளினாலும், அதிகம் விமர்சனத்துக்கும் அவர் உள்ளாகியிருந்தார். இருந்தபோதிலும் யாழ் மக்கள் அவரை குறிப்பிட்ட அளவு வாக்குகளினால் வெற்றியடையப் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.