மெட்டா நிறுவனம் மீது முறையற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பிரசல்ஸ் நாடு புகார் தெரிவித்து இருந்த நிலையில் , ஐரோப்பிய ஆணையம் மெட்டா நிறுவனத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி அபராதம் விதித்துள்ளது.
2004ல் அமெரிக்காவை மையமாக கொண்டு மார்க் ஜுக்கர்பர்க் என்பவர் தனது நண்பர்களுடன் தொடங்கிய நிறுவனம், பேஸ்புக். உலகெங்கிலும் உள்ள இணையதள பயனர்களுக்கு கருத்து மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான சமூக வலைதளமாக பேஸ்புக் முன்னணியில் உள்ளது.
மேல்முறையீடு செய்யவுள்ள மெட்டா நிறுவனம்
தற்போது மெட்டா எனும் நிறுவனத்தின் கீழ் பேஸ்புக், மற்றும் மற்றொரு பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் ஆகியவை இயங்கி வருகின்றன. இவற்றை மார்க் ஜுக்கர்பர்க் நிர்வகித்து வருகிறார்.
இந்தநிலையில், ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தை நடத்தி வரும் ‘மெட்டா’ நிறுவனம் போட்டியாளர்களை ஒடுக்கும்வகையில் முறையற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பிரசல்ஸ் நாடு முறைப்பாடு செய்தது.
இதுபற்றி 27 நாடுகளின் ஒழுங்குமுறை அதிகாரிகள் அடங்கிய ஐரோப்பிய ஆணையம் நீண்ட நாட்களாக விசாரணை நடத்தி வந்தது. விசாரணையின் இறுதியில், மெட்டா நிறுவனத்துக்கு சுமார் 80 கோடி யூரோ அபராதம் விதித்துள்ளது.
ஆனால், போட்டியாளர்களும், வாடிக்கையாளர்களும் எவ்வகையில் பாதிக்கப்பட்டனர் என்பது நிரூபிக்கப்படவில்லை என்று மெட்டா நிறுவனம் கூறியுள்ளடன், இது தொடர்பில் மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.