லெபனானின் சிவில் பாதுகாப்பு மையத்தின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 12 வைத்தியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக லெபனானின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
அதேவேளை இஸ்ரேலின் தாக்குதலால் நேற்றையதினம் மாத்திரம் லெபனானில் 59 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 182 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது