நியூசிலாந்து பாராளுமன்றத்தில் மாவோரி பழங்குடியினத்தைச் சேர்ந்த இளம் உறுப்பினரான ஹனா ரவ்ஹிதி கரேரிகி மைபி-கிளார்க் , ஹக்கா எனப்படும் பழங்குடி நடனம் ஆடி சர்ச்சைக்குரிய சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, சட்ட நகலை பாராளுமன்றத்தில் கிழித்த சம்பவம் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில், நியூசிலாந்து அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த வைதாங்கி உடன்படிக்கையின் சில மாற்றங்களை கொண்டு வருவதற்காக நியூசிலாந்து ஆளும் கூட்டணியில் ஏசிடி கட்சி முன்மொழிவை கொண்டு வந்து வாக்கெடுப்பிற்கு அழைப்பு விடுத்தது.
அதன்படி, நேற்று நியூசிலாந்து பாராளுமன்றத்தில் வைதாங்கி உடன்படிக்கையின் சில மாற்றங்களை கொண்ட வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது, நியூசிலாந்து நாட்டின் பூர்வ குடிகளான மாவோரி பழங்குடியினத்தைச் சேர்ந்த இளம் உறுப்பினர், ஹக்கா எனப்படும் மாவோரிகளின் நடனம் ஆடி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஹனா-ரவ்ஹிதி கரேரிகி மைபி-கிளார்க் எனும் 22 வயதான இளம் உறுப்பினர், தனது கன்னி உரையின் போதே மாவோரி மொழியில் பேசியது நியூசிலாந்து மட்டுமல்லாது உலக அளவில் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
New Zealand’s parliament has erupted into fiery debate, personal attacks and a haka over a controversial bill that proposes to radically alter the way New Zealand’s treaty between Māori and the crown is interpreted.
Voting temporarily suspended amid disruptions including a Māori… pic.twitter.com/YoSLmWJquu
— Visegrád 24 (@visegrad24) November 14, 2024