நயன்தாராவின் குற்றசாட்டுக்கு தனுஷின் வழக்கறிஞர் பதில் அறிக்கை

Netflix ஆவணப்படம் தொடர்பாக நயன்தாராவின் குற்றச்சாட்டுகளுக்கு தனுஷ் தரப்பு வழக்கறிஞர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தனுஷ் தரப்பு வழக்கறிஞர் அறிக்கை
சமிபத்தில் நயன்தாரா தனுஷ் மீது ஒரு குற்றச்சாட்டு வைத்தார். இது விமர்சிக்க தக்க ஒரு சர்ச்சையாக மாறியுள்ளது. நயன்தாராவின் ஆவணப்படத்திற்கான டிரெய்லரில் தோன்றும் நானும் ரவுடி தான் படத்தின் சுருக்கமான, மூன்று வினாடி வீடியோவிற்கு தனுஷ் 10 கோடி ரூபா நஷ்ட ஈடு கேட்டுள்ளதாக நயன்தாரா தனுஷ் மீது குற்றம் தெரிவித்து இருந்தார்.

இதற்கு தனுஷ் தரப்பில் இருந்து எந்த விதமான பதிலும் வரவில்லை. இந்நிலையில் தற்போது தனுஷ் தரப்பு வழக்கறிஞர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “காட்சிகள் தயாரிப்பாளராக தனுஷுக்கு சொந்தமானது.

அதை பதிவு செய்த தனிநபருக்கு அல்ல. ஆவணப்படத்தில் இருந்து மீறும் உள்ளடக்கத்தை நீக்குமாறு நயன்தாரா மற்றும் அவரது குழுவினருக்கு சட்டக் குழு அறிவுறுத்தியுள்ளது.

24 மணி நேரத்திற்குள் இதை செய்ய தவறினால் தவறினால், நயன்தாரா மற்றும் நெட்ஃபிக்ஸ் இந்தியா இருவருக்கும் எதிராக ரூ. 10 கோடி நஷ்டஈடு கோரி, தனுஷ் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

“நானும் ரவுடி தான்’ படத்தின் மீதான எனது வாடிக்கையாளரின் பதிப்புரிமையை மீறும் உள்ளடக்கத்தை உங்கள் வாடிக்கையாளரின் ‘நயன்தாரா பியோண்ட் தி ஃபேரிடேல்’ ஆவணத்தில் 24 மணி நேரத்திற்குள் பயன்படுத்துவதன் மூலம்

எனது வாடிக்கையாளரின் பதிப்புரிமையை மீறும் உள்ளடக்கத்தை அகற்றுமாறு உங்கள் வாடிக்கையாளருக்கு அறிவுறுத்துங்கள். இதை மீறினால் வாடிக்கையாளர் 10 கோடி ரூபாய்க்கு நஷ்டஈடு கோருவது உட்பட, உரிய சட்ட நடவடிக்கையைத் தொடங்க நிர்பந்திக்கப்படுவார். என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.