இலங்கையில்(sri lanka) தேங்காய் விலை நாளாந்தம் உச்சம் தொட்டு வருகிறது. அந்த வகையில் சந்தையில் தேங்காயின் விலை நுகர்வோர் வாங்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
சிறிய தேங்காய் ரூ.140ல் இருந்து ரூ.180-200 ஆக உயர்ந்துள்ளது.
வாழ்க்கைச் சுமையால் வாடும் மக்கள், அன்றாடம் தேவைப்படும் உணவுப் பொருட்களின் விலை உயர்வைத் தாங்க முடியாமல் தவிக்கின்றனர்.இந்த நிலையில் தேங்காய் விலை உயர்வும் அவர்களை வாட்டி வதைக்கிறது.
அரசாங்கம் தேங்காய் விற்பனை
தேங்காய் விலை உயர்வை தொடர்ந்து அரசாங்கம் கட்டுப்பாட்டு விலையில் தேங்காயை பொதுமக்களுக்கு விற்பனை செய்து வந்தது. எனினும் பொதுமக்களுக்கு தேவையான அளவு வழங்கப்படாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.