யாழ்ப்பாணம் – சென்னை (Chenni) இடையேயான விமான சேவையை அலியன்ஸ் எயார் விமான சேவை நிறுவனம் இடைநிறுத்தியுள்ளது.
யாழ்.(Jaffna) சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னைக்குத் தினமும் சேவையில் ஈடுபட்டு வந்த இந்திய விமான சேவையான அலியன்ஸ் எயார் (Alliance Air) நிறுவனமே தனது சேவையை இந்த மாதம் முதல் இடைநிறுத்தியுள்ளது.
இதன் காரணமாக தற்போது யாழ்ப்பாணம் – சென்னைக்கான விமான சேவையை இன்டிக்கோ எயார் நிறுவனம் மட்டுமே நடத்தி வருவதனால் தினமும் இடம்பெற்று வந்த இரு சேவைகள் ஒரு சேவையாக மட்டுமே இடம்பெறுகின்றது.
சிவகங்கை பயணிகள் கப்பல்
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை இடையே கடந்த ஒகஸ்ட் 16ஆம் திகதி சிவகங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பமாகியது.
இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக நாகை (Nagapattinam) – இலங்கை (Sri Lanka), காங்கேசன்துறை (Kankesanturai) வரையான கப்பல் சேவை ஒரு மாதத்துக்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாகை – இலங்கை கப்பல் சேவை நவம்பர் 19 முதல் டிசம்பர் 18 வரை கப்பல் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.