யாழில் கன மழையால் வெள்ளத்தில் வீதிகள்!

யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இன்று (21) தொடர்ச்சியாக கடும் மழை பெய்து வருவதனால் வீதிகளில் வெள்ளம் பாய்ந்தோடுகின்றது.

மழை காரணமாக மாவட்டத்தின் பல இடங்களிலும் உள்ள வீதிகள் மற்றும் தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

வீதிகளில் வெள்ளம் ஓடுவதால் பாடசாலை சென்ற மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.