2004 ல் திருமணம் செய்துகொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷின் விவாகரத்திற்கான இறுதி முடிவு நவம்பர் 27 வெளியாக உள்ளது.
விவாகரத்து சர்ச்சை
ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் கடந்த 2004 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் இருவரும் சமூக ஊடகங்களில் 2022 இல் பிரிந்ததாக அறிவித்தனர்.
இந்த விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் பின்னர் இவர்களது உறவில் ஐஸ்வர்யாவின் தந்தை ரஜினிகாந் தலையீடு இருந்ததால் இருவரும் சேர வாய்ப்பு உள்ளது என வதந்திகள் பரவி வந்தன.
ஆனால் விவாகரத்தில் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் உறுதியாக இருந்தனர். இவர்கள் இருவரும் தங்களது எக்ஸ் தளத்தில் தங்கள் பிரியப்போவதாக அறிவித்து இருந்தனர். இதன் மூலம் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
இந்த அறிக்கையில் “நண்பர்கள், தம்பதிகள், பெற்றோர்கள் மற்றும் ஒருவருக்கொருவர் நலம் விரும்பிகள் என 18 வருடங்கள் ஒன்றாக இருந்தது. பயணம் வளர்ச்சி, புரிதல், சரிசெய்தல் மற்றும் இன்று நாம் நமது பாதைகள் பிரியும் இடத்தில் நிற்கிறோம்.
என இருவரும் பதிவிட்டு இருந்தனர். இத்தனை பிரச்சனைகளுக்கு மத்தியில் தற்போது தங்களின் இரு மகன்களுக்காகவும் போயஸ் கார்டனில் ஒருவருக்கொருவர் நெருக்கமாக வசிக்கிறார்கள் மற்றும் குழந்தைகள் இருவருடனும் நேரத்தை செலவிடுகிறார்கள்.
மகன்களுடன் சேர்ந்து சமூக வலைத்தள பக்கத்தில் பல புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்கின்றனர்.பிள்ளளைகளுக்காக ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இணைந்து வாழ்கின்றனர். இவர்களின் விவாகரத்திற்கான இறுதி வழக்கின் முடிவுகள் நவம்பர் 27 அறிவிக்கப்படும்.