ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை கடந்த காலங்களில் பிரதிநிதித்துவப்படுத்தி பின்னர் பிரிந்து சென்ற உறுப்பினர்களை மீண்டும் கட்சிக்குள் இணைப்பதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, மொட்டு கட்சியிலிருந்து தற்போது நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள 3 நாடாளுமன்ற உறுப்பினர்களும், அக்கட்சியில் இருந்து விலகி ஏனைய கட்சிகளில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்றத்தில் ஒரே குழுவாக செயற்படுவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
இதேவேளை, நாடாளுமன்றில் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களை இந்தக் குழுவில் சேர்ப்பது குறித்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கவனம் செலுத்தி வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.